வியாழன் கவிதை

jeyam

கவி 594

காதல் செய்யும் உலகம்

வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாததொன்று
இரு இதயங்களை ஒன்றாக்கும் அற்புத உணர்வது
காதலியின் வனப்பை காதலன் விழிகளால் பருகுவான்
காதலன் நிழலையும் காதலி சொந்தங்கொண்டாடுவாள்

ஒருவருக்குள் ஒருவர் தொலையும் அற்புதமும்
ஒரு மூச்சில் இருவர் வாழும் அதிசயமும்
இருவேறு ஜீவன் ஒரேபாடல் பாடும் புதுமையும்
இந்த காதலர் உலகில் மட்டுமே நிகழும்

இன்பமான இம்சைகள் சுகமான தீண்டல்கள்
பார்த்துவிட்டால் உள்ளத்துள்ளே துடிப்புகள்
பார்க்காவிட்டால் இனம்புரியாத தவிப்புக்கள்
சுகமான வலிகளே இந்தக் காதல் வந்தாலே

விரும்பியே சிறைப்படும் ஒரு இயற்கை நிகழ்வு
ஒருவரைத் தவிர்த்து ஒருவரில்லை உறவின் கலப்பு
உளறிடும் வார்த்தைகள் கூட இரசித்திட வைக்கும்
சொப்பனங்கள் இரவைத்தாண்டி பகலுக்குள்ளும் தொடரும்

ஒருவருக்கொருவரை அப்படிப் பிடிக்கும்
இருவரின் அன்பினை வாழ்க்கையும் படிக்கும்
அள்ள அள்ள குறையாது காதலுணர்வது பெருகும்
காதலின் காலம் வரையும், மகிழ்ச்சியின் கோலம்

எங்கோ பிறந்தோரை ஒன்றாக இணைப்பதும்
பேசிடும் நிமிடங்கள் பொன்னாகிப் போவதும்
சாதி மதம் மொழியினைத்தாண்டிய ஈர்ப்பதும்
இந்த பருவங்கள் பூத்திடும் தேசத்தில் தான்

09-02-2022
ஜெயம்