வியாழன் கவிதை

jeyam

கவி 593

பூக்கட்டும் புன்னகை

புன்னகையைப் பழகிக்கொள்ள வாழ்க்கை அழகாகும்
புன்னகை செய்துபார் நீ தொலைத்த முகத்தை திரும்பப் பெறுவாய்
பாறைமனமும் மகிழ்ச்சி வேர்விடும் புன்னகைத்துப்பார்
உன்புன்னகையே இன்னும்பல புன்னகைகளை உருவாக்கும் எனவே புன்னகைசெய்

உதடுகளிலிருந்து புன்னகைக்கு விடுமுறையா
புன்னகைக்கப்பார் நீ விலங்குகளிலிருந்து வேறுபடுவாய்
நீ புன்னகைத்தால் உன் இடுக்கண் செயலிழந்துவிடும்
கோபம் சுவாசமிழக்கும் நீ குழந்தையாகிவிடுவாய்

புன்னகையென்பது இலவசமாகக் கிடைக்கும் ஒரு அருமருந்து
புன்னகையைக் கற்றுக்கொள் ஆயுளை பெற்றுக்கொள்
கவலைகளை அழிக்கும் ஒரே கருவி இதுதான்
மன இறுக்கத்தை நொறுக்கும் கதாயுதமும் இதுதான்

புன்சிரிப்பு விலைகொடுத்து வாங்கக்கூடியதொன்றல்ல
புன்னகையை மட்டும் அணிந்து பார்
பலரால் நீ கவரப்படுவாய்
மனிதர்கள்முன் சிரிக்க யார் தடைபோட்டது
அப்படியாயின் காண்ணாடியின் முன்னின்று முதலில் புன்னகைப் பயிற்சிசெய்

ஒரு சிறு புன்னகை வானளாவிய அன்பை உருவாக்கும்
ஒரு மெல்லிய புன்னகை காதலை உற்பத்தி செய்துவிடும்
ஒரு கள்ளங்கபடமற்ற புன்னகை இதயங்களை கொள்ளையடித்துவிடும்
ஒரு பரந்த புன்னகை வெறுப்பவரையும் எதிரியையும்கூட நட்பாக்கிவிடும்

இன்னும் எதற்காகவோ புன்னகையில் கஞ்சத்தனம்
சிந்தாவிட்டால் புன்னகை வாழ்க்கை அது நரகம்
புன்னகையை முகத்தில் குடியிருத்திப்பார்
அகம் நிலையான சுகம் காணும் ஒன்றை அறிந்துகொள்
புன்னகை மட்டும் தான் பக்கவிளைவில்லாத மருந்து
எனவே முயற்சித்துப்பார்

அறுசுவைகளையும் தாண்டி நகைச்சுவையையும் அறி
புன்னகை ஒரு கலை அதைப்படி
புன்னகை மகத்துவமானது அதன் தத்துவம் கல்
புன்னகை பேரழகு அதை உதட்டால் செய்
புன்னகை வாழ்க்கையில் வெற்றிக்கான மந்திரம்
அதைத் தினம் உச்சரி.

ஜெயம்
02-02-2022