காதல் கைகூடுமோ
இதயத்துள் ஆனந்த உத்தரிப்பு
புதுவித உணர்வதன் உச்சரிப்பு
எதற்காகவிந்த புதுத் துடிப்பு
அதுதந்ததென்ன வாழ்க்கையில் பிடிப்பு
எனக்குள்ளே ஏனிந்த மாற்றங்கள்
மனதிற்குள் மகிழ்ச்சியின் ஏற்றங்கள்
ஒருதரந்தானே அவளைப் பார்த்தேன்
நிரந்தரமாகவேன் நினைவுள் சேர்த்தேன்
யாரவள் விழிகளிற்கேன் பட்டாள்
பேரழகியவள் என்னுயிரையும் தொட்டாள்
மனக்களிப்பில் தனியாகச் சிரிக்கின்றேன்
தினந்தினம் என்னென்னமோ புரிகின்றேன்
கொள்ளையடித்தவள் என் மனதை
சொல்லவருவாளோ தன் மனத்தை
கொண்டகாதலும் அவளால் நிறைவேறுமோ
கண்ட கனவுகளெல்லாம் கைகூடுமோ
ஜெயம்
28-01-2022