சந்தம் சிந்தும் கவிதை

Jeyam

பரவசம்

இல்லறம் என்னும் இன்பச் சோலையிலே

உள்ளங்கள் இரண்டு களிக்கும் வேளையிலே 

காதலலைப் பேணும் மேனிகளிற்கங்கு பரவசமே 

ஆதலால் பேரின்ப சொர்க்கம் அவர்வசமே 

அழகான அர்த்தங்கொண்ட வாழ்க்கை நகர்வு 

வளங்கொண்ட அன்பதை தினம்தினம் பகிர்வு 

ஆண்டுகள் நகர்ந்து உயர்த்திக்கொண்டாலும் அகவை

தோன்றியே வாழ்விலின்னும் கூடுகட்டுது உவகை 

ஜீவனுக்குள் ஜீவன்சேர்த்து வாழுகின்ற கலை

தேவனும் தேவியும் காட்சிதருவதான நிலை

நாளும்பொழுதும் மகிழ்ச்சியால் அகங்கள் பொங்குமே 

வாழும்வரைக்கும் மொத்தமாய் சுகங்கள் தங்குமே 

ஜெயம்

24-01-2022