வியாழன் கவிதை

jeyam

கவி 591

கொண்டாட்டக் கோலங்கள்

தத்தையென தத்திக் குதித்த கொண்டாட்டக் கோலங்கள்
சொத்தையாக்கி தடுமாற வைத்ததென்ன திண்டாடும் காலங்கள்
அற்புதங்கள் நிகழ்த்திவிட பூத்தத்ததிந்த புகழ் வாழ்க்கையிலே
கற்பனையும் செய்து பார்க்கா, துன்ப நிலைகள் நீள்கையிலே

இயற்கையன்னை அரவணைப்பில் மகிழ்ந்திருந்த வேளை
சிதைக்க மண்ணை ,விதி செய்ததுவோ நிகழ்ச்சிகளின் நாளை
பாடிப்பறந்த பறவைகளெல்லாம் அடங்கிப் போனது இங்கே
கூடிக் களித்து பழகிய வாழ்க்கை ஓடிப்போனது எங்கே

மேடை பழையது வேசமோ புதியது புரியாத பாத்திரம்
முடியும் நேரமோ அறியாத நாடகம் ,எவருமறியா சூத்திரம்
நடமாடி இன்பமாய் அலைவதை பொறுக்காது யாரிட்ட சாபமோ
முடிவில்லா ஆனந்தத்தை முடித்தவர் யாரெவர் அவர்க்கென்ன கோபமோ

சுகங்களை அள்ளி அரவணைத்து தம்மோடிணைத்த தோற்றங்கள்
அகப்பட அவதிக்குள்,வந்ததென்ன என்னென்னமோ மாற்றங்கள்
யாரின் தேசமிது,தொலை தூரத்திலே அதோ சந்தோசம்
மாறும் உலகிலே புரியவிலை அது போடும் புதிய வேஷம்

ஜெயம்
19-01-2022