பாமுகப் பூக்கள்
பாவலர் ஈர்ப்பதால் உருவாகி
பாமுகப் பூக்களாய் வெளியாகி
பார்வலம் வந்ததந்த நிகழ்ச்சி
ஆர்வலர்கள் ஆர்பரித்தே மகிழ்ச்சி
கற்றவரின் பாராட்டுக்கள் குவிந்ததினம்
உற்சாகத்தை உற்பத்திசெய்தது கவிஞர் மனம்
தொல்தமிழின் அற்புதத்தை அங்குகண்டேன்
சொல்லமிழ்தை செவிகொண்டே உண்டேன்
பா.வை.ஜெ இன் அழகானதொரு பாணிநடை
பாவை ஆக்குவோர்க்கது பெருங்கொடை
பாமுகப்பூக்களாம் இந்த வெளியீடு
காவியதே காவியத்தை மொழியோடு.
ஜெயம்
17-01-2022