பாமுகப் பூக்கள்
சிந்தை சுவைக்கும் சந்தப் பாக்கள்
சிந்திக் கிடக்கும் பாமுகப் பூக்கள்
உச்சரித்தார் மொழியை அமுதானது செவியோடு
அச்சேறி விழிசுவைக்க நூலாகவும் வெளியீடு
பொருள்கொண்ட சொல்லெடுத்து மொழியுடனிங்கு விளையாட்டு
அருளெனவே கிடைத்துவிட்ட தொகுப்பாளருக்கும் பாராட்டு
பாலோடு பழம்சேர்த்து உண்டதைப்போல் நிறைவுவரும்
தாலாட்டும் வார்த்தைகள்கொண்ட செவ்வாய்மாலை உவகைதரும்
எத்தனையெத்தனையோ பாவலர்களின் கவி ஆக்கங்கள்
அத்தனை படைப்புக்களும் பெருக்கிடும் உற்சாகங்கள்
பல்வேறு கவியாளர்களின் கவிப்பாட்டு பரவசமே
சொல்லாடல் அவர்கேட்டு மொழிமகிழும் இதுநிசமே
சந்தங்கள் முத்தம்கொடுக்கும் கவிகளைக் கண்டு
மொத்தமாக சந்தோசித்து தவிப்பதும் உண்டு
ஆட்டிவிக்கும் மனங்களையே மொழியாலொரு நிகழ்வு
கேட்டுவிடக் கேட்டுவிட உயிருக்குள்ளூறிவிடும் மகிழ்வு
என்னவிதமான தலைப்பிற்கும் கொடுப்பார்கவி இவர்கள்
சொன்னதேயேசொல்லாமல்
படைப்பார்கவி எவர்கள்
தளந்தந்திடும் பாமுகத்தை வாழ்த்தவென துடிக்கின்றேன்
உளந்தந்த பாவைஜெக்கு நன்றிகூறி முடிக்கின்றேன்
ஜெயம்
07-01-2022