வியாழன் கவிதை

jeyam

கவி 558
மாற்றத்தின் திறவுகோல்

மாற்றம் ஒன்றின் திறவுகோலாய் வந்ததுவே புத்தாண்டு
ஏற்றம்தரும் வரவின் நாளாய் தன்னகத்தே தான்பூண்டு
பிறரில் குற்றம் காண்பதனை அடியோடுதான் நிறுத்தி
உடன்பிறந்த இயல்பைத்திருத்தி பழகிடுவோம் வெறுப்பைத்துரத்தி

போட்டி, பொறாமை, வஞ்சகம் எதுவும் இன்றி
நாட்டிலே பழகுவோம் உயிருடன் உடல்போல் ஒன்றி
நேற்றையவாழ்வு போனதே, தொலைந்ததை மறந்துவிடுவோம்
போற்றியே புதுஆண்டை புதிதாய்ப் பிறந்திடுவோம்

அடுத்தவர் பின்நின்று புறம்பேசி என்னத்தைக் கண்டோம்
கெடுத்துவிடும் சுயநலத்தை எண்ணத்தில் கொண்டோம்
இருட்டான வாழ்க்கையதும் வெளிச்சத்திற்கு வரட்டும்
விரட்டிவிட்டே அறியாமை புரிதலினைத் தரட்டும்

வெற்றிகரமான பொய்யராக வாழ்ந்த கோலங்கள் களையட்டுமே
பெற்றிருக்கும் புத்தாண்டில் புதுப்புது மாற்றங்கள் விளையட்டுமே
எடுத்துவிட்டால் தவறில்லாத வாழ்க்கைக்கான சரியானமுடிவு
அடுத்தடுத்து நாளுள்வரும் நற்சிந்தனையின் மாற்றங்களால் விடிவு

ஜெயம்
03-01-2022