இலக்கு
கொண்டுவிடு வாழ்க்கையில் ஓர் இலக்கு
கண்டுவிடு வெற்றிதனை இது உலகவழக்கு
முடிவு எடுத்தபின் பயணத்தைத் தொடங்கு
விடிவு வருமட்டும் முயற்சிகொள் பன்மடங்கு
தொடங்கியபின் பின்வாங்குவதில் இல்லையே அழகு
அடக்கிவிடும் காலம்வரினும் அதனுடனும் பழகு
அடியடியாய் எடுத்துவைத்து இலக்கதனை அடை
படிகள்பல தாண்டிக்கொண்டே வருந்தடைகளினை உடை
தடங்கல்கள் வந்து திட்டமிட்டதை குழப்பப்பார்க்கும்
விடச்சொல்லியே நோக்கத்தை இழப்புக்களைச் சேர்க்கும்
தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடல் ஆகாது,
முன்னெடுத்த இலட்சியத்தை அடையாமல் போகாது
கைக்கெட்டும் தூரத்திலேயே,பிடிக்கும்வரை ஓயாதிரு
வைக்கும் உறுதிப்பாட்டில் நிலவைப்போல் தேயாதிரு
தயங்கினால் தடையாயுனக்கு நீயே ஆவாய்
முயன்றுபார், விரும்பியதந்த உன்னதநிலைக்கு நீபோவாய்
ஜெயம்
02-01-2022