சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.05.2024. இலக்கம்-264
“விழிப்பு”
————————
பெண் பிள்ளை வளர்ப்பில்
பெற்றோர்களின் முக்கிய விழிப்பு
தொற்று நோய்களினால்
உலகமே கவனிப்பில் விழிப்பு
போதை வஸ்தினால் சமூகமே
போராட்ட விழிப்புணர்வு
மரங்களை அழித்து கட்டிடங்கள உருவாகுவதில்
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் விழிப்பு
கவிதைகளை குறிப்பிட்ட திகதியில்
எழுதி அனுப்ப வேண்டுமென
கவிஞர்களின் ஆனந்த விழிப்பு
கவிதை வாசித்து திறனாய்வில் உயரிய பணிப்பு
கவி தரும் உறவுகளின் எதிர் பார்ப்பில் பெரும்
விழிப்பு
ஜெயா நடேசன் ஜேர்மனி