சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-30.04.2024
இலக்கம்-263
“அழகு”
——————
எனக்கு நானே அழகு
நாலு பக்கமும் கடல் சூழ்ந்த என் ஊர் அழகு
கல் வேலிகள் அமைத்து அரண் அழகு
சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் தீவுகளில் அதிகமானோர் பார்த்து மெச்சுவது பேரழகு
என் வீட்டு முற்றத்து பூப் பந்தல் அழகு
எங்களது கூட்டு குடும்ப வாழ்க்கை அழகு
என் வீட்டு பெண் பிள்ளைகளின் கண்ணிற்கு மை அழகு
என் வீட்டு ஆண்கள் கல்வி உயரழகு
நாம் காலில் போட்ட கால் சங்கிலி அழகு
வர்ண் வர்ண சேலைகள் வாங்கி உடுத்தி அழகு பார்த்ததில் அழகு
கவிதை கட்டுரை எழுதி எழுதி படிப்பதில் ரசித்த அழகு
மகத்தான பாராட்டுக்கள் பெறுவதில் பேரழகு
ஜெயா நடேசன்