சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 12.03.2024
கவி இலக்கம்-256
“வேலி அடைப்போம்”
மரமேறும் மன்மதனை
பனையோலை தென்னோலை
வெட்ட வைப்போம்
குத்தூசி குத்தி கயிறு கட்டி
வேலி அடைப்போம்
அடுத்தவர் வீட்டார் இல்லையெனில்
காணி பிடிப்பில் கவனம் கொள்வோம்
வேலி அடைத்த உயரத்தில்
கூட்டி சேர்த்த குப்பை போடுவோம்
கிழுவை பூவரசு தாக்க பிடிக்க
வேலி அடைப்போம்
பொட்டுக்குள் வைத்து நாய் கோழி ஆடு
சண்டை போடுவோம்
கறையான் பிடிப்பில் தட்டி கொட்டி
வேலி அடைப்போம்
அடுத்த வீட்டுக்காரன் வேலி காணாது
மதிலைக் கட்டி உயர்த்தி விட்டான்
கள்ளர் காடையர் களவெடுத்து ஓட
வேலியும் இல்லை புதினமும் தெரிவதுமில்ல
எங்கு பார்த்தாலும் தகர வேலிகள்
மதில் வேலிகள் அடைப்பாகி விட்டன