கவிதை நேரம்-07.03.2024
கவி இலக்கம்-1835
இயற்கை மாற்றங்கள்
——————–
இறைவன் படைத்த இயற்கை பல மாற்றங்கள்
கோடை வரவில் வெப்பம் கூடுது
கடைகளெல்லாம் உடுப்புக்கள் குவியுது
மக்கள் கூட்டம் ஏறி இறங்குது
தெருவால் போக வா வாவென்று அழைக்குது
கஸ்டப்பட்டு கடன் பட்டு பட்டு வாங்க நினைத்திட்டு
பூக்கள் நிறை வர்ண சட்டை கோட்டோடு
ஆசைப்பட்டு தெரியப்பட்டு மார்க் பார்த்து
காசைப் போட்டு வாங்கி போட்டு
உச்சி வெயில் தலையிலே சுட்டு விட்டு
களைப்போடு வந்து சேர்ந்து கொண்டேன்
தண்ணீருக்குள் நனைய விட்டு தோய்க்க விட்டு
சாயம் சாயமாக களன்று போனது
வெயில் பட்டும் வெளிறியும் ஆனது
என் முற்றத்து பூஞ் சோலையிலே
வர்ண வர்ண அழகிய இறக்கையோடு
ஒரு சோடி வண்ணப் பூச்சிகள் பளபளப்பாக
இறக்கை அடித்து எழும்பி பறந்தன
பறக்கும்போது பார்த்து மலைத்தேன்
என் சட்டையை விட வெயில் பட்டு
அதன் அழகு வர்ணம் பறந்து போனது
இப்படித்தான் இயற்கையின் முன்னிலையில்
அடிக்கடி தலை குனிய வைத்து மாற்றியது