சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-06.02.2024
கவிதை இலக்கம்-252
” காதலர்”
—————-
மாசி 14 காதலர் தினமானதாம்
காதலரை இணைத்த மத குருவாம்
வலன்டைன் உயிர் நீத்த நினைவு நாளுமாம்
திகதியை குறித்து மறைந்து போனவராம்
அம்பபிகாவதி அமராவதி ஷாஜகான் மும்தாஜ்
உண்மையான நிலைக் காதலர்களாம்
சிவப்பு றோஜா பரிசும் பரிமாற்றமாம்
காதல் கடிதங்கள் முத்தமிடுமாம்
கண்ணும் கண்ணும் கதை பேசுமாம்
கண்ணீர் கம்பலை கச்சி நனையுமாம்
காதல் இன்றேல் சாதல் என தத்துவம் பேசுமாம்