வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-01.02.2024
கவி இலக்கம்-1811
கைக்குள் கையாய்
கைத்தொலைபேசி
——————
நவீன விஞ்ஞான வளர்ச்சியில்
உருவானது கைத் தொலைபேசியே
மனிதன் தொடர்புக்கு சாதகமானது
அவசர உலகில் மிக அவசியமானது
அகிலத்தை ஆட்டி படைக்கிறது
இளையோருக்கு முதல் எதிரியாகினது
உலகத்தை சுருட்டி ஆட்சியில் வைக்கிறது
உள்ளங்கையில் மடக்கி வைக்கிறது
உணர்வுகளை களவாடி உறவுகளை பிரிக்கிறது
சுறு சுறுப்பானோரை சோம்பேறி ஆக்கிறது
கைகளில் தவண்டு எதிரியாகின்றது
கனவுகள் பறித்து நினைவுகளை அழிக்கிறது
தொடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாகிறது
கைகள் கண்கள் மூளை சேதம் தருகிறது
மனதை அடிமையாக்கி நினைவுகள் அழிக்கிறது
அதிக பணம் கொடுத்து கடனும் ஆகிறது
கை பேசி என செவிக்கே வந்து நின்றாய்
தொலை பேசி என தொலைந்து போகிறாய்