வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-14.12.2023
கவி இலக்கம்-1786
சுதந்திரக்காற்று எங்கே
———————–
நீர் வளம் நில வளம் நிறைந்த
எம் தாய்த் திரு நாடே உன் நிலைதான் என்னே
வார்த்தைகளால் கூற முடியாத நிலை
எம் இலங்கைத் திரு நாட்டுக்கு
இன்று சொல்ல முடியாத செயல்களால்
பொருளாதாரப் பிரச்சினைகளும்
கொள்ளைகளும் கொலைகளுமாவே
நாட்டை விற்று கடனாளியானது
மலரும் சமுதாயம் அழிவின் நிலையில்
மின்சாரத்தடை வேலையின்மை
மருத்துவர்கள் வெளியேற்றம்
கல்வி பிரச்சினையில் தேசம்
மனித நேயம் மலர வேண்டும்
மனித உரிமைகள் காக்க படவேண்டும்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர வேண்டும்
கையேந்தும் நாட்டு நிலை மாற வேண்டும்
நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும்
நேசிப்போம் எம் பிறந்த நாட்டை
சுவாசிப்போம் தமிழர்கள் சுதந்திரக் காற்றை