வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-07.12.2023
கவி இலக்கம்-1782
மனிதத்தின் நேயமே
———————–
அதசயங்கள் மிகுந்த அகில உலகத்திலே
போர்களும் அழிவுகளும் இழப்புக்களும்
மாமனிதர்கள் பெருகிய தேசங்களிலே
குழந்தைகள் பெண்கள் உட்பட பெரியோர்கள்
மரணத்திலே மாண்டு போகையிலே
மனிதத்தின் நேயமே இறந்தே போய் விட்டனவே
பொருளாதாரப் பிரச்சினை மூழ்கையிலே
துண்டு போட்டு வெற்றியான அரசியல்வாதிகள்
கண் மூடித்தானே வாழ்கினன்றனரே
போதை வஸ்து களவு சண்டை அழிவினிலே
மன அழுத்தத்ததில் மாண்டு போகையில்
காவலர்கள் கடமை தவறி விட்டனரே
பத்து மாதம் சுமந்து தோளில் தூக்கிய பெற்றோரை
தெருத் தெருவாக அலைய விட்டு
இறுதியிலே காப்பகங்களிலே விட்ட பிள்ளைகள்
கற்பனை மிகுந்த கனவு உலகத்திலே பிள்ளைகள்
மனித நேயத்தை தொலைத்து நிற்கின்றனரே