வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-23.11.2023
கவி இலக்கம்-1774
கல்லறை வீரனின்
கனவிதுவோ
—————————-
தம் இன்னுயிரை ஈந்து
எம் தாய் மண்ணை மீட்க
நம் தமிழ் இனத்திற்காக
பிறந்து வாழ்ந்த தேசிய போராளிகளே
எண்ணற்ற கனவோடு களம் இறங்கினீர்கள்
தளத்திலே உயிரை மாய்த்து
தமிழ் மண்ணுக்கே உரமானீர்கள்
நீங்கள் செய்த அத்தனை தியாகங்கள்
தாயகக் கனவுடன் சாவை வென்றீர்கள்
வீரக்காவிய நாயகர்கள் மறவர்கள்
மாவீரர்களாய் கல்லறையில் அடங்கினீர்கள்
கனவுகள் மெய்ப்படக் காலம் வரும்
வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி
விடுதலை வேண்டி மரணித்த மைந்தர்கள்
காலத்தால் அழியாத காவியப் புருசர்கள்
உங்களது கனவு இலட்சியம் நிறைவேறும்
கல்லறை வீரர்களே நாமும் காத்திருப்போம்
கார்த்திகை மாதத்திலே கல்லறை அஞ்சலிப்போம்