கவிதை நேரம்–12.10.2023
கவி இலக்கம்–1759
வழிகாட்டிகள்
———————-
எம் பெற்றோர்க்கு அடுத்தவர்கள்
பெரியோராக எம் ஆசான்களே
கல்வி கற்போருக்கு வழிகாட்டியாக
சிறந்த மாணவர்களை உருவாக்க
காசியினில் ஆசான்களை விட எவருமில்லை
கொடுக்க கொடுக்க குறையாததும்
சென்ற இடமெலாம் சிறப்பு பெறுவதும்
கல்வி எனும் பெரும் செல்வமே
கல்வி ஊட்டி ஒழுக்கம் சொல்லி கொடுத்து
வழிகாட்டியாக வள்ளலாம் ஆசான்களே
மாணவர்களை மதிப்புக்கு உள்ளவராக்கி
ஏணிப்படி வைத்து உயர வைப்பவர்களே
எந்த ஒரு தொழிலுக்கும் வாழ்விற்கும்
அத்திவாரம் இடுவது கல்வி முறையே
மாணவர்க்கு உறவு முறையாக வழிகாட்டிகளே
இப் பெருந்தகையோர் போற்றுதற்குரியவர்களே
1966 ஒக்டோபர் 5 யுனோஸ்கோ ஆசிரியர் தினமாமே
நாமும் போற்றி புகழ்ந்து வணங்குவோம்