வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-31.05.2023
கவி இலக்கம்-1698
அபகரிப்பில் காணிகள்
——————————-
என்றும் நாம் நேசிக்கும்
எம் தாயக மண்ணின் காணிகள்
அபகரிப்பில் இழந்து நிற்கும் மக்கள்
பல காலம் வாழ்ந்த வீட்டு உடமைகள்
பல கதைகள் கூறும் மரங்கள்
அபகரித்து மக்கள் நடுத்தெருவில்
கூடு இழந்த பறவைகளாய் அவதியில்
இந்து கோவில் கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில்
பல புத்த விகாரைகள் எழும்புகின்றன
வெள்ளை வெளீரென காட்சி பாதுகாப்பில்
நிலையிழந்து நிம்மதியிழந்து எதிர்ப்பு நிலையில்
அரச உதவியுடன் பெளத்த பிக்குகள் பற்றோர்
தாய்லாந்து பிக்குகள் பாத யாத்திரை கதிர்காமம் வரையில்
திருகோணமலையில் பெளத்த விகாரை
எம்மக்களின் போராட்டமும் எதிர்ப்பும்
மக்களையே அதிர வைக்கும் சம்பவங்களாக
பற்பல இடங்களில் அகழ் ஆய்வில் விகாரைகள்
பற்பல பிரச்சினைகள் மாறி மாறி சோதனைகள்
வலுவிழந்து நலமிழந்து பலமிழந்து எம் மக்கள்
காணிகள் அபகரிப்பில் அழுது புலம்புகின்றனரே