வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-25.05.2023
கவி இலக்கம்-1694
பொசிக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்
———————————
யாழ் நூலகம் பொசிக்கி தீயானபோது
துயரச் செய்தி கண்டும் கேட்டும்
உலக மக்கள் இதயமே நொந்தது
தாவீது அடிகளார் மூச்சே அடங்கியது
ஆசிய மக்களின் முதல் தர நூலகம்
பொசுங்கி தீயோடு சங்கமமானது
வரலாற்று ஆவணங்கள் யாழ் சரிதைகள்
சாம்பலாகி மண்ணோடு மண்ணானது
இருந்தும் இன்று பூத்திட் பொலிவுடன்
வெள்ளை வெளீரென கம்பூரமானது புதிய நூலகம்
அழகான பசுமை நிறை பூஞ்சோலை மத்தியில்
பூத்திட்ட மலராக எழும்பி நிற்கிறது
இன்று வீட்டிற்கு வீடு கலைஞர்கள் முளைத்து
பண்டிதர்களாக கவிஞர்களாக தோன்றியபோது
மீண்டும் ஆவணங்களால் நிரப்பப் பட்டனவே
எம் இன சிறியவர் பெரியவர் வழிகாட்டியாக
பல கட்டுப் பாடுகளுக்குள் உயர்ந்து விட்டது
கலைஞர்கள் அறிவுப் புதையல்களை கொடுங்கள்
பூத்திட்ட மலராக பொலிவாக மேலும் சிறக்கும்