சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.05.2023
கவிதை இலக்கம்-223
முள்ளிவாய்க்கால்
————————
ஈழப்போரின் இறுதிக்கட்ட நாள் மே 18
2009ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டின் நாள்
40 ஆயிரம் எம் மக்கள் படுகொலை
செய்யப்பட் கொடிய நாள்
வலி சுமந்து வலி அறிந்து நொந்த நாள்
குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டு புதைந்த நாள்
இரசாயனக் குண்டுகளால் வீசி அளித்த நாள்
உடல்கள் சிதறி கருகி சாம்பலான நாள்
இரத்த வெள்ளம் ஆறாக ஓடிய நாள்
சொந்த மண்ணில் அளித்து
கொடியவர்கள் மகிழ்ந்த நாள்
சுவாசம் நின்ற தாயின் மார்பில் பால் குடிக்க
தாய் உயிர் பாவப்பட்ட நாள்
செய்திகள் பார்த்தும் கேட்டும் அழுத நாள்
குடும்பத்தோடு கூட்டாக கொன்று குவித்த நாள்
உறவுகளை புதைக்க முடியாது
இறந்த உடல்களை கடந்து ஓடிய நாள்
வயிற்று பசியோடு அந்தரித்த நாள்
அரிசியை தண்ணீரில் கஞ்சி உயிர் காத்த நாள்
உயிரைக் கையில் பிடித்த கொண்டு ஓடிய நாள்
முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள்
எம் தமழினத்திற்கு என்றும் கறுப்பு நாள்