சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.05.2023
இலக்கம்-222
பெற்றோர்களே
———————
பிரிக்க முடியாத உறவுகள்
இணை பிரியாத அன்புகள்
பெற்றோரே பிள்ளைகளின் ஆசான்கள்
வீட்டில் குடும்பத்தின் தலைவர்கள்
தாயானவள் வயிற்றில் பத்து மாதம் சுமந்தவள்
தந்தையானவர் வாழ்நாள் தியாகம் செய்பவர்
பெருமை சேர்க்கும் பெற்றோரை
சிறுமை சேர்க்கும் பிள்ளைகள்
பேணி காத்த பெற்றோர்கள்
நல்வழி காட்டுபவர்களே
இறுதி காலம் வரை பெற்றோரை
அணைத்து உதவுவது பிள்ளைகள் கடமையன்றோ
காப்பகங்களில் பெற்றோரை
அனாதைகள் மாதிரி விடாதீர்கள்
இறந்த பின் சமூகத்திற்காக
காரியம் செய்து பாவம் சேர்க்காதீர்கள்