சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சநதம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.04.2023
இலக்கம்-219
ஆற்றல்
—————
ஆற்றல் மிக்கன் அறிவாளியானது
அறிவாற்றல் உயர்ந்தவன் பெயரானது
ஆளுமை கொண்டவன் பலமானது
பிறப்பில் ஆற்றல் இறைவன் செயலானது
சென்ற இடமெலாம் சிறப்பு பதிவானது
இறப்பிலும் புகழ் சான்றானது
மனிதத்துவம் மாண்பு உயர்வானது
ஆற்றலும் ஆக்கமும் அழிக்க முடியாதது
உலகில் செயல்கள் பதிவானது
எனது ஆற்றல் மற்றவர்க்கு தொழிலானது
நான் பெற்றது எனக்கு முதலானது
ஆற்றல் ஏற்றம் அடைவது வாழ்வில் சிறப்பானது
ஜெயா.நடேசன் ஜேர்மனி