வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-13.10.2022
கவி இலக்கம்-1989
முத்தமிழே போற்றுக
———————
இயல் இசை நாடகமாய்
நாற் திசையும் பெரும் புகழ் சேர்க்கவே
முத்தமிழாய் வித்தாகும் எம் இனத்தின்
பெயர் புகழுடன் மூத்த மொழியாகுமே
முத்திரை பதித்து பேரும் புகழுடன்
இருள் அகற்றி ஒளி பிறந்திடுமே
தமிழின் உயிராக இயல் இசையாக
நாடகமும் மேடையில் அரங்கேறினால்
ஒவ்வோர் மக்களின் வாழ்விலும்
உள்ளங்கள் நிறைந்து மகிழுமே
மூவேந்தர்கள் வளர்த்த முத்தமிழே
முத்தமிழே எமது முதல் மொழியாக
சொத்தாக பெற்று நல்லாகி வளர்ந்து
செந்தமிழால் இனிதாக பெருமை பெறுமே