சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.06.2022
கவிதை இலக்கம்-181
பிரிவு துயர்
—————–
நேற்று நடந்தவை அனுபவமாக
இன்று நடப்பவை நல்லவையாக
நாளை நடக்க இருப்பவை அறியாதவையாக
நாட்கள் கடந்து ஒரு மாதமே சரித்திரமாக
பிரிவு துயரில் பங்கு கொண்ட நினைவில்
கடல் வணங்கு தாலாட்டும் நெடுந்தீவிலே
ஆநிரைகள் பால் சிந்தும் பசுந்தீவினிலே
ஆசிரியமணிக்கு ஆறாவது பிள்ளையாக பிறந்து
கல்வியில் மேம்பட்டு ஆசிரியை தொழிலாக்கி
ஆசிரியை கவிதாயினி பேச்சாளராக
பல துறைகளில் சிறப்புகளை பெற்று
பாமுகத்தில் பலருடைய பாராட்டுக்களுடன்
சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த வாழ்க்கை
பொல்லாத காலன் திடீரென வாழ்வில் வந்ததோ
பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நியதியன்றோ
இறைவனின் சன்னிதியில் இளைப்பாறட்டும்
ஆன்மா ஈடேற்றம் பெற வேண்டுதல் செய்வோம்