சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.06.2022
கவிதை இலக்கம்-180
வெப்பத்தின் விந்தையிது
————————————-
இயற்கையென்னும் அழகுத் தாயே
எமையெல்லாம் தாங்கி சுமப்பவளே
உலக வெப்பம் தாங்க முடியலையே
எதைச் சொல்லி உனை திட்டி தீர்க்க
எப்படித்தான் மனதை தேற்ற
கண்ணில் தெரியும் காலத்தின் விந்தை
உடலிலே ஒரு களைப்பு கண்ணிலே மயக்கம்
உறக்கம் வந்தும் உறங்காத நிலைமை
வீட்டுக்குள்ளே புழுக்கம் தேடுது தாகம்
கொழுத்தி எரியுது சுட்டு எரிக்குது
பட்டு எரியுது வளமிகு மரங்கள்
கொட்டி தீர்க்குது இலைச் சருகுகள்
சித்தம் கலங்கிய புத்தி ஜீவிகள்
நீரைத் தேடி ஊர்வனவும் கால் விலங்கின இறப்பும்
உயர் பறவையினமும் ஊர் விட்டு இடப் பெயர்வும்
ஆற்றலி மனித மட்டும் அகப்பட்டு புலம்புதே