கவிதை நேரம்-24.03.2022
கவி இலக்கம்-1481
குடிநீர்
—————-
மேகம் கறுத்தது
இருள் சூழ்ந்தது
மெல்லென குளிர் காற்று வீசியது
துளி துளியாய் நீர் கொட்டியது
சிறு துளிகள் பெரு வெள்ளமானது
கிணறு குளம் குட்டை நிரம்பியது
மக்களுக்கு மிருகங்களுக்கு குடி நீரானது
தாகம் தீர்த்து வரமாய் வந்து பலனளித்தது
குடிநீரை சூடாக்கி குடிப்பது ஆரோக்கியமானது
நிலம் பசுந்தரையானது
விவசாயிகள் மனம் குளிர்ந்தது
குடிநீர் பஞ்சமான நாடுகள் பலது
இறந்தோர் தொகையும் அதிகமானது
பணம் கொடுத்து குடிநீர் காசானது
காகம் குடிநீர் தேடி அலைந்தது
குடமதில் சிறு கற்கள் போட்டு நிரப்பியது
தாகம் தீர்த்து பறந்து போனது கற்பனைக் கதையுமானது
வான்மழை பொழிந்தது வையகமும் வளம் பெற்றது