சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.03.2022
கவிதை இலக்கம்-167
பணி
——————
மண்ணில் புதைந்த மணி ஜெய மணி
ஆசிரியப்பணி ஆன்மீகப்பணி
மண்ணோடு புதைந்து விட்டது
உடன் சகோதரியே தலைமை ஆசிரியாய்
பாடசாலை மாணவர்களோடு
கல்வியில் பயணித்த காலங்கள்
நீர் அறிவூட்டிய பிள்ளைகள் எவரும்
உம் பணியை மறப்பதற்கில்லை
கோவில்களிலும் சமூகங்களிலும்
உம் ஆன்மீகப் பணியை மறப்பாரில்லை
நற்பணியில் ஊருக்காய் உழைத்தீர்கள்
உம் புன்முறுவல் கண்டு ஊக்கம் பெற்றோர்
உம் பேச்சை கேட்டு உள்ளம் உருகினோர்
வாழும்போது வார்த்தையால் உம் பணிக்கு நன்றி
வார்த்தை இன்றிப் போகும்போது மெளனத்தால் நன்றி
அகிலத்தில் தன் கடன் பணி செய்தே சாதனை படைத்தீர்
ஆண்டவன் சன்னிதியில் அமைதியாய் உறங்குவீராக