வியாழன் கவிதை

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-17.03.2022
கவி இலக்கம்-1447
அன்பைத் தேடி
————————
அன்னையர் தினத்தன்று
அதிகாலை விழித்தெழுந்து
அவசரம் அவசரமாக குளித்து முழுகி
வெள்ளை வெளீரென சேலை உடுத்தி
ஆவலாய் ஓடி வந்து வழிமேல் விழி வைத்து
பிள்ளைகளின் அன்பைத்தேடி
காத்துக் கிடந்து நிற்கிறாள் வயோதிப தாய்
பெண் ஆண் தங்கும் காப்பக இல்லமதில்
அணு அணுவாய் எண்ணியபடி
மனதில் பல எண்ண நினைவில்
நேரம் ஓடுகிறது ஏமாற்றம் கொண்ட தாய்
மனம் புழுங்கி மனதினில் திட்டுகிறாள் போலும்
தாயின் சாபத்திற்கு ஒரு போதும்
விமோசனம் கிடையாது என்பது உண்மைதான்
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லா
சிந்திப்போம் செயலாற்றி வாழ்வோம்