சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.03.2022
கவி இலக்கம்-163
திமிர்
——————-
தானே மகத்தான மனிதனென்பார்
அகந்தையில் ஆட்டம் அணிந்திருப்பார்
குழி பறிக்க கூடவே உதவிடுவார்
திமிர் கொண்டு ஆட்டி படைத்திடுவார்
வஞ்சகம் போட்டி பொறாமை சேர்த்திடுவார்
தலையில் கனமும் சுமை கொண்டிடுவார்
உள்ளமதில் பொய்யும் புரட்டும் சொல்லிடுவார்
நீதிக்கு பதில் அநீதியும் நிலை குலைய வைத்திடுவார்
ஆணவம் கொண்டு அகிலத்தில் நிறைந்திடுவார்
அடங்காப்பிடாரி ஆட்டம் கொண்டு அவதியுறுவார்
மனிதநேயம் அற்று அவதியுறும் மக்களுக்கோர்
சாத்தான் கொடுத்திருக்கிற யுத்தம்
வல்லரசுகளின் திமிர்வாதமே என்போம்
உலகம் காப்பாற்றப்படுவது இறைவன் செயலன்றோ
இயேசு திமிர்வாதகாரனை குணமாக்கியதை நினைப்போமே