வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-24.02.2022
கவி இலக்கம்-1465
வாழ்த்து
———————-
நல்ல மனதோடு வாழ்த்து
இரட்டிப்பான வாழ்த்து கிடைக்கும்
இறைவனுக்கு முதல் வாழ்த்து
நன்மையோ தீமையோ நன்றி வாழ்த்து
பெற்றோர் பெரியோர் ஆசிரியர் வாழ்த்து
பிள்ளைகள் செயற்பாடு தட்டிக் கொடுத்து வாழ்த்து
நத்தார் புது வருட கொண்டாட்ட வாழ்த்து
இன்முக வாழ்த்து இனிமையானது
மறைமுக வாழ்த்து எரிச்சலானது
நல் வாழ்த்து நாமிருக்கும் வரை புனிதமானது
நாலு பேர் வாழ்த்து பெருமையானது
பிறந்த நாள் மேலோங்க மகிழ்வானது
திருமண வாழ்த்து ஆனந்த வாழ்வானது
ஆயுள் பெருக ஆசீர் வாழ்த்து உயர்வானது
சாதனையாளர் படைப்பு வாழ்த்து சரித்திரமானது
கடந்த ஆண்டு வாழ்த்தி அனுப்பினதானது
பிறந்த ஆண்டு வாழ்த்து கூறி வரவேற்பானது