சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.02.2022
கவி இலக்கம்-161
மனித வாழ்க்கை
—————————–
உயிர் கொண்ட பூமி
உதிரத்தால் தோய்கிறது
இதயம் கனிந்து கசக்கிறது
உயிர் நிலையம் துடிக்கிறது
கொடையென தந்த இறைவன்
காலமும் வந்து ஆட்டி படைக்கிறது
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி
அவனியில் வாழ்வதற்கு
போராடியே வென்றிடுவோம்
கட்டுப்பாடுகளை கடைப்பபிடிப்போம்
வளமாக்கும் இயற்கைதனை
வாழ்வெலாம் பேணிடுவோம்
மகிழ்விக்கும் நம் வாழ்வினை
ஒற்றுமையோடு ஓட்ட பழகிடுவோம்
சிந்தித்து செயலாற்ற கற்றிடுவோம்
சீரான வாழ்க்கை அமைப்போம்
சிறப்புடனே வாழ்ந்து வளம் பெறுவோம்