வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-10.02.2022
கவி இலக்கம்-1457
செல் வந்தது
———————–
செல் வந்தது
செல்லமாக வந்தது
தூக்கி அணைத்து வைத்திருப்போர் பலர்
அருகினில் படுத்த படுக்கையில் தன்னோடு
உறங்க வைப்போர் சிலர்
செல் என்பதை வைலோஜி ஆசிரியை
உயிரணுவாம் என்று அழைப்பாரே
செல் என்பதை பிசிக்ஜ் ஆசிரியை
பற்றறி என நல்ல பெயர் வைத்தாரே
மற்ஸ் ஆசிரியர் பிள்ளைகளுக்கு
செல் விற்பனை பொருளாகி விட்டதே
செல் என்பதை சரித்திர ஆசிரியர் சொன்னாரே
ஜெயில் என்று கூறி துக்கமடைந்தாரே
தமிழ்மொழி ஆசிரியை செல்
அதாவது கிட்ட நிற்காதே போவென்று கூறினாரே
இப்படியாக செல் வந்தோ
செல்லும் இடமெலாம் செய்தி சொல்லும் செல் போனை
நாம் சொல்வதையே
செல்லாது தடுத்து
சிலையாக நம்மை
சிறை பிடிக்க வைக்குமே
செல்வது போல நமக்கு
செல் -வதை ஆகுது-நம்
உடல் செல்களும் சிதைவாகுது
அலைக்களிக்கும் அலைபேசியை
அளவோடு அணைப்போம்
அறம் மீறி அளவு மீறவே
அறவே அணைப்போம்
வாழ்க்கையே கையடக்க பேசியாக இராது
தேவைக்கேற்றதாக பயனாக்குவோம்