சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.02.2022
இலக்கம்-160
மனமே என் மனமே
————————-
இறைவனின் சக்தியே மனமே
எதை எதையே அறிந்திட வேண்டும்
என நினைக்கும் மனமே
எதை எதையே தெளிந்திட வேண்டும்
என எண்ணும் மனமே
ஏனோ என்னையே தெரிந்திட
ஏன் நீயோ உன்னை நினைப்பதில்லையே
எங்கே எப்போதும் விசாலமுறுமே
எண்ணங்களினாலும் செயல்களினாலும்
எம்மால் வழி நடத்த செல்லப்படுகின்றதோ
அங்கே அந்த விடுதலையின் விழிப்பாகுமோ
ஆதியும் அந்தமும் இல்லாததுமே
அறிய மறுக்கும் என் மனமே
மாண்பினை அறிவாயோ
மதிப்புடன் வளர்த்திடுவாயோ
மனமே மனமே என் மனமே