சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி வாரம்-02.02.2022
கவி இலக்கம்-1452
நேரம்
—————
நேரமிது நல்ல நேரமிது
நாட்களுக்குள்ளே வந்து போகும் நேரமிது
நேரமே வாழ்விற்கு மூல காரணம்
நேரமோ வாழ்விற்கு பொன்னானது
கடைப் பிடித்து ஒழுகுவது
மனிதர் மாண்பன்றோ
நேரத்தை முதலீடு செய்து கொண்டு
காலத்தை போற்றி புகழ்வோம்
போனால் திரும்பு வராதது நேரம்
வாச் என்பது கவனிப்பு
அதுவே நமக்கு பக்கத்தில் இருப்பது
வலது கையில் கட்டுவோர் சிலர்
இடது கையில் கட்டுவோர் பலர்
சுவரில் தொங்க விட்டு அண்ணாந்து
பார்ப்போர் வீட்டார்
நேரமோ நெருங்குது தொற்றுநோய் பெருகுது
ஒவ்வொரு பொழுதினிலும் நேரம் கவனிப்போம்
நேரம் தாழ்த்தாது உடனுக்குடனே செய்து முடிப்போம்