தினம் ஒரு பாமுக கவி-31.01.2022
கவி இலக்கம்-1450
சுதந்திர ஏக்கம்
——————————-
சந்திரனும் நட்சத்திரங்களும்
இடையிடையே வந்து போவதும்
சூரியன் ஒளியின் பிரகாசம் கிடைத்தாலும்
இருளின் ஆதிக்கம்
இன்றைய நிலையில் இரவை கவ்விய படிதான்
அமைதிக் காற்றை சுவாசித்தும்
வருடங்கள் மூன்றை கடந்து விட்டன
அநிநாயமாய் அழிந்து போன உடலங்கள்
உலகளவில் உயிர்கள் பல்லாயிரம்
எமது சந்ததியினர் கூட
சுதந்திர வாழ்வினை காணவில்லை
இளையோரும் தொற்றால் பாதிப்பே
நாடுகளில் சுதந்திரமற்ற வாழ்க்கை
நேசிக்கும் களங்கமற்ற உள்ளங்கள்
பெருமூச்சுடன் கவலையில் முடங்கினரே
எப்போது வருமோ மக்களுக்கு ஒரு விடியல்
சுதந்திர வாழ்வின் ஏக்கம் எப்போது தீருமோ