சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வ1ரம்-01.02.2022
கவி இலக்கம்-159
வாழ்க்கை சிறப்புகள்
——————————–
தேடிப் பெற வேண்டியது சொத்து
தேடி வைத்து பார்த்து சுவைக்கும்போது சத்து
கோடி இன்பம் அள்ளி தருவது வித்து
அதுவே கல்வி எனும் பொதுச்சொத்து
புத்தகத்தில் இருக்கும்போது எழுத்து
தத்துவமாய் சொல்ல சிறந்த கருத்து
அதன் பயன் பெறுவது எமைப் பொறுத்து
கல்வியே உண்மை செல்வமென நினைத்து
மனிதிலே அதனைப் பதிய வைத்து
கல்வியிலே படிப் படியாய் உயர வளர்த்து
பட்டங்கள் பெற்று சாதனை பெறுவது சித்து
கல்வி படியாதார் வருந்த வைத்து
அதை எப்போதும் பெற்றோர் வலியுறுத்து
பலதையும் அறிய வைத்து முன்னேற்றம் பெற்று
நாளை அவர் பெயர் வாழ்வில் பொன் எழுத்து
கல்வியின் அழகு மூன்று எழுத்து
இளமைக் கல்வியே சிலை எழுத்து
கல்வியே கருந்தமை என ஈடுபடுத்து
அதனால் நீ பெறுவாய் உயர் பதவி மதிப்பு