வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை வாரம்-27.01.2022
கவி இலக்கம்-1449
மறக்க முடியவில்லையே
————————————
காலம் கடந்த ஞாபகங்கள்
என் வாழ்வில் நடந்தவைகளை
திரும்பி பார்க்கையில்
கண் மூடித் திறக்கையில்
வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள்
இதயம் கசிந்து கனக்கிறது
உயிர் நிலையம் துடிக்கிறது
பண்பும் பாசமும் பலமும் நிறைந்தவராய்
பேச்சிலே அன்பும் பெருமையில்லா குணமும்
அயலவர்க்கு உதவுதல் பகிர்தலும்
சிரித்த முகம் தெத்தி பல்லின் அழகும்
உறவோடு உயிராக வாழ்ந்து
உரித்தாகி வாழ்க்கைப் பட்டு
எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
பாதி வழியிலேயே பிள்ளைகளையும் தவிக்க விட்டு
தாய் அன்பை முழுதாக மனமேற்றம் இருந்தும்
மண்ணுலகை திறந்து இறைவனடியில்
ஆனந்த துயில் கொள்ளச் சென்றீரோ
நாம் நிமிடங்கள் தோறும் இறந்தே வாழ்கின்றோம்
என்றும் எம்முடனே விளைந்த விளை பயிரே
வாழ்க்கை உறவை தொலைத்து விட்டு
எம்மை விட்டுச் சென்றது நீர் எங்கே
இதயத்தால் நாம் அழுது அஞ்சலி செலுத்துகிறோம்
சொத்து சுகமெல்லாம் உம் நிறைவாய் இருக்கும்
அத்தனை இதயமும் உம் இறைவால் நினைத்திருக்கும்
ஆன்மா இறைவன் சன்னிதியில் இளைப்பாறட்டும்
உங்களது 18வது நினைவு நாளில் நாமும் உங்களோடு
கல்லறை சென்று தீபம் ஏற்றி மலர் சாத்தி நிற்போம்