சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுகக் கவி-26.01.2022
கவி இலக்கம்-1448
தமிழின் மகத்துவம்
—————————-
வளரும் வருங்கால மொட்டுக்களே
புலம்பெயர் தேசமதில்
அன்னைத் தமிழ்மொழி அழகுறவே
ஆற்றலும் செயல் ஆக்கமும் கண்டு
மனம் ஆனந்தம் அடைந்திடவே
சிறார்கள் மத்தியில் துள்ளி குதிக்கிறது
சின்னஞ்சிறு வயதினிலே பாமுகத்திலே
சிங்காரமான பேச்சுக்களும் வாசிப்புகளும்
அறிவிப்பு அனுபவங்களும்
தகவல் செய்தி தேடல்களும்
அழகு தமிழில் நாளும் அரங்கேறுகின்றது
இனிய தமிழ்மொழி அறிவு வளரும் நிலையன்றோ
வானொலி ஒலி தந்த பெரிய வரமன்றோ
இன்பத் தமிழ் செந்தமிழ் மகிமை உலகமன்றோ
இதுவன்றோ தமிழின் பெருமையன்றோ