தினம் ஒரு பாமுக கவி-24.01.2022
கவிஇஇலக்கம்-1446
கூட்டிப்பெருக்கு
————————
கூட்டிப் பெருக்கு குப்பையை அகற்று
சுத்தம் பேணு சுகம் கவனி
பேனை எடு கடதாசியில் எழுது
கூட்டிப் பெருக்கி விடையை போடு
நல் வாழ்வு பெற உழைத்து உண்
சோம்பலை அகற்று உற்சாகமாக உயர்ந்திடு
ஒற்றுமையை கடைப்பிடி உறவுகளை கூட்டு
குடும்ப வாழ்வை வளமாக்கி வாழப்பார்
நல்லது செய்து நன்மையைப் பெருக்கு
புண்ணியம் தேடி வாழ்வை கூட்டு
ஏழை எளியவர்க்கு கூட்டி கொடு
அள்ளிக் கொடுக்காது கிள்ளியாவது பகிர்