வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-20.01.2022
கவி இலக்கம்-1445
கொண்டாட்டக் கோலங்கள்
————————————–
கோடை விடுமுறை என்று வந்திடும்
கோலாகல கொண்டாட்டங்கள் நிறைந்திடும்
கோவில்கள் திருவிழா கோலங்கள் இடம் பெறும்
கோடி ஆடைகள் பல வர்ணம் கோலங்கள் பெருகிடும்
தையும் வந்திடும் தைப்பொங்கலும் பொங்கிடும்
புத்தாண்டு பிறக்கையிலே புத்தாடை கை விசேடங்கள்
பணியாரப் பண்டங்கள் உறவுகள்பரிமாறப்படும்
உழவர் திருநாள் தமிழர் திருநாளாகக் கொண்டாட்டங்கள்
வீட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் என
மாண்பு மிக்க தமிழர் கொண்டாட்ட கோலங்களே
கல்வி கலாச்சார பாரம்பரிய விழாக்கள் இடம்பெறும்
பிறந்த நாள்,புனித நீராட்டு,கலியாண கொண்டாட்ட கோலங்கள்
பண்பாட்டு கொண்டாட்டம் ஒரு புறம் இடம்பெறும்
பகட்டும் ஆடம்பர செலவுகளும் அலங்கோலமாக இருக்கும்
காதலர் தினக்கொண்டாட்டம் வெற்றி தோல்வி கோலங்களே
கிறிஸ்மஜ் பலரின் அர்த்தமற்ற ஆடம்பரக் கோலங்களே
கொண்டாட்டக் கோலங்கள் எம் சந்ததியினர்
பண்பாட்டுக் கோலங்களாக அமைய
ஒன்றாய் கூடி உறவுகளோடு கொண்டாடி
அர்த்தம் உள்ளதாய் இளையோருக்கு எடுத்து செல்லுவோம்