சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.01.2022
கவி இலக்கம்-157
பாமுகப் பூக்கள்
—————————
புத்தாண்டும் புதுப் பொலிவுடன் பிறந்தது
பாமுகத்தில் பாமுகப் பூக்கள் மலர்ந்தது
பாமாலை சூட்டி பூமாலையாக மிளிர்ந்தது
கவிஞர் இருபத்து கவிதைகள் பிரசவமானது
எதுகை மோனை சந்தங்கள் துள்ளி விளையாடியது
கவித் தலைப்புக்கள் அழகானது ஆரோக்கியமானது
அள்ளித் தந்த அன்னைத் தமிழ் மொழி கவியானது
கவிகளை புள்ளி வைத்து பாமுக பூக்களாகியது
கருத்தாடல் விரிவாக்கம் தட்டிக் கொடுப்பு சிறப்பானது
வானைத் தொட்டு ஒலித்து நின்று உருவானது
நற் தொண்டாற்றும் கவிஞர் பாவையருக்கும்
போற்றி புகழ்ந்து வாழ்த்தி பாமாலை சூடுகிறேன்
களம் வந்து பரவசமாக்கும் பாமுக அதிபருக்கும்
போற்றி புகழ்ந்து வாழ்த்தி புகழாரம் சூடுகிறேன்