சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி வாரம் 18.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1443
சிக்கல்-விக்கல்

இடியப்ப சிக்கலும்
தலை மயிர் முடியும் வந்து விட்டால்
பிரித்து எடுப்பது பெரும் கஷ்டமன்றோ
குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கிடையில்
வரும் சிக்கல் பெரும் துன்பமன்றோ
சிக்கலில் அகப்பட்டவர் துன்பப் படும்போது
சிலர் நக்கலாக பார்த்து சிரிப்பர்
மானிடருக்கு விக்கல் வருவது சகஷமன்றோ
உச்சி தலையில் தட்டி தண்ணீர் குடிக்க
விக்கல் பறந்தோடி விடுமே
உணவு அருந்தும்போது கதைகள் தவிர்த்து
சிரிப்பதை விட்டு சாப்பிட்டால்
விக்கல் ஏற்படாது நன்மையன்றோ