சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.01.2022
கவிதை இலக்கம்-156
மாற்றம் பெறுவோம்
——————————–
புலர்ந்துள்ள புத்தாண்டை
புதுப் பொலிவுடன் வரவேற்போம்
புனிதத்தை புத்தாடையாக போத்தி
புவியை மாற்றி அமைப்போம்
கனி தரும் வார்த்தைகள் பேசி
கரு மொழி சொற்களை தவிர்ப்போம்
இனிதாக பகிர்தலில் கரம் நீட்டி
மனிதத்தை மாண்புடன் காப்போம்
வன்முறைகள் கொடும் செயல் அகற்றி
வாழ்வில் அமைதியை தேடுவோம்
கற்பனையில் இயற்கையை வசமாக்கி
கருக்கொண்ட கவிதை எழுதி படிப்போம்
பொன் போன்ற நேரத்தை பயனாக்கி
மனிதத்தை வளர்த்திட வேண்டுவோம்
வாழ்வில் துன்பங்களை அறவே நீக்கி
இன்பங்களை வாழ்வாக்கி வாழ்வோம்
நலம் பெற்று தமிழ்போல் நிலைத்திருப்போம்
தெய்வீக வாஞ்சயையுடன் பயணித்து பலன் பெறுவோம்