தினம் ஒரு பாமுக கவி-12.01.022 புதன்
கவி இலக்கம்-1440
கண்டு கொண்டேன்
அன்னையின் அரவணைப்பில்
அன்பைக் கண்டு கொண்டேன்
தந்தையின் உள் பாசத்தில்
புதிய பாதையில் வழி முறைகளை கண்டு கொண்டேன்
ஆசானின் கல்வி படிப்பதில்
நல்ல அறிவை பெற்று கொண்டேன்
ஒரு மருத்துவ தாதியின் கரத்தில்
உதவும் பண்பை கண்டு கொண்டேன்
நண்பியின் அன்பு பிணைப்பில்
ஆபத்தில் உதவும் தோழியாக அறிந்து கொண்டேன்
கற்பனையில் கருக்கொண்ட பலதையும் எழுதி
பாமுகத்தில் கிறுக்கிய கவிகளுக்கு பாராட்டுப் பெற்றேன்
வாழ்க்கை பாதையில் பல வழிகளில் முன்னேற்றம் கண்டு
நல்ல எதிர்காலத்தை பெற்றுக் கொண்டேன்