தினம் ஒரு பாமுக கவி-11.01.2022
கவி இலக்கம்-1439
சமுதாய பெண்ணவள்
அதிகாலை கண் விழித்து
குளித்து முழுகி கோலம் போட்டு
கடவுளுக்கு மலர் சாத்தி கும்பிட்டு
அடுக்களை நோக்கி ஓடுவாள்
வெளி வேலை வீட்டு வேலையென
பாரமாக குடும்பத்தை சுமந்திடுவாள்
வற்றிய வயிற்றுடன் களைப்பின்றி
ஓடி ஓடி தன் பணியை செய்திடுவாள்
தாயாய் தாரமாய் தாதியாய் ஆனவள்
சாயாது தனது இல்லத் தலைவி ஆவாள்
கடமையை செய்து களிப்புற மகிழுவாள்
உடைமைதனை சேர்த்து பக்குவப் படுத்துவாள்
காலா காலமாய் ஒதுக்கப் பட்ட பெண்கள்
கொடி கட்டி பறந்து அற்புதங்கள் செய்கிறாள்
முன்னேற்ற பாதையில் முன்னிலையில் சமூகத்திலே