வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-06.01.2022 வியாழன்
கவி இலக்கம்-1937
மாற்றத்தின் திறவுகோல்

இன்னமும் விடை தெரியாத காலமாக
கேள்விகளுடனே விடிந்த புத்தாண்டே
வாசல்களை மட்டும் திறந்து விட்டு
கதவுகளை மூடி வைத்துள்ளது ஏனோ
மாண்டு வரும் மனிதத்தை மலரச் செய்து
மாற்றம் காணும் மாதமாகி தை மாதத்தை
அடையாளம் உணர்த்தும் வரிசையில் தந்ததேனோ
பொன்போன்ற நேரமதை பயனாக்கி
பெறுவதிலும் தருவதே பேரின்பமாய்
மனிதத்திலே மாற்றம் பெற்று வாழ்வோமே
வெற்றிதனை பெற்றிடவே உழைத்திடவே
உலகிற்கு ஒளியான ஊடகத்தை
தருகின்ற செய்திகளை நாம் அறிந்து
தரணியிலே இளையோரை தமிழிலே ஊக்குவிப்போம்
பட்ட நல்ல அறிவினை பகிர்ந்தளித்து
சான்றுகள் பெற வளர்த்திடுவோம்
ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்டு நாம்
தானமும் தர்மமும் பகிர்ந்தளிப்போம்
தன்னலம் நம்மிடையே விடை பெற
வளரும் சமுதாயத்தை ஊக்கிவிப்போம்
தட்டிக் கொடுப்பதும் தடவிக் கொடுப்பதும்
ஊக்குவிப்பதும் பகிர்தலும் ஒரு திறவுகோலே
நாளை விடியலுக்காய் நல்லதோர் சமுதாயம்
அமைப்போம் மாற்றத்தில் நல்லதை பெறுவோம்