வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-02.03.2023
கவி இலக்கம்-1650
வாழ்ந்த சுவடுகள்
—————————
எம்மோடு வாழ்ந்த சுவடுகள்
ஒரு நாள் முதுமை அடைவது உண்மை
முதுமை அடைவது இறைவன் விதி என்பது
இதுவே உயிர்களின் பொது விதியுமாகும்
எமக்கு விட்டு சென்ற சுவடுகள்
அனுபவங்கள் திறமைகள் மறக்க முடியாதவை
ஆக்கம் ஊக்கம் தந்து வழிகாட்டியவர்கள்
வாழ்ந்து வளர்ந்து தடம் பதித்தவர்கள்
ஓடியாடி வாலிபர்களாக வளர்ந்து பெருத்து
கூனிக்குறுகி சிறு மழலையானோர்
இவையெலாம் தரை தட்டி போச்சு
படிக்கட்டில் ஏறி ஏறி தள்ளாடி இறங்கி
தடி ஒன்றை ஊன்றலாகி முக்காலாகியது
வாக்கும் மனமும் இல்லா நிலையும்
பேச்சும் நோக்கும் வழி மாறிய செயலும்
பார்வை ஒளியின் குறைந்த நிலையும்
வாழ்ந்து வளர்ந்து பல சுவடுகள் பதித்தவர்கள்
மூலையில் முடங்கி முதுமையானார்கள்
வாழ்ந்த சுவடுகள் தனிமையில் வாடுவது ஓர்மம்
பிள்ளைகள் காப்பகம் விடுவதில் ஆர்வம்
விழிமேல் வழி பார்த்து நிற்போர் ஏக்கம்
முதுமை எல்லோருக்கும் பெரும் தாக்கம்
காவோலை விழ குருத்தோலை சிரிப்பதுண்டு
நமக்கும் நாளை நடக்குமென அறியாத ஏழ்மை
வாழ்வில் தடம் பதித்த சுவடுகள் என்றும் நினைவில்