சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.02.2023
இலக்கம்-212
மொழி
——————
தமிழளே உலகின் முதல் மொழியாம்
தமிழர்கள் பேசும் அன்னை மொழியாம்
அமுதம் போன்ற தேன் மொழியாம்
குமரிக் கண்டந்தில் பிறந்த முது மொழியாம்
தமிழ் மன்னர்கள் வளர்த்த செம் மொழியாம்
அந்தந்த இனத்தவர்க்கு தாய் மொழியாம்
உலகில் மாந்தோர் விரும்பும் தமிழ் மொழியாம்
சொல் வளங்கள் நிறைந்த இனிய மொழியாம்
அழிவுகள் பல கண்டும் எளிதாய் உயர்ந்து
நிற்கும் முது மொழியாம்
தமிழர் தமிழ்மொழியை
பாதுகாப்பது கடமையன்றோ
வீடுகளில் பிள்ளைகளுடன்
தமிழ் மொழியில் கதைப்பதும்
சொல்லிக் கொடுப்பதும் சிறப்பன்றோ
அன்னைத் தமிழ் மொழியை வளர்ப்போம்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்